பிரான்ஸ் தலைநகா் பாரிஸில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது.
'ஏர்பிரான்ஸ்' என்ற விமான நிறுவனத்தின் ஏஎப்108 விமானம் நேற்று பிரான்ஸ் நாட்டின் தலைநகா் பாரிஸில் இருந்து 11.49 (உள்ளூர் நேரப்படி) மணிக்குப் புறப்பட்டு 9 மணி நேரம் 50 நிமிடங்கள் பயணித்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நள்ளிரவு 11.55 மணிக்கு வந்தடைந்தது. இதில் 111 பேர் இதில் பயணித்தனர்.
விமானம் தரையிறங்கிய விடியோவையும் சென்னை விமான நிலைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பாரிஸில் இருந்து தில்லி, பெங்களூரு, மும்பைக்கு ஏர்பிரான்ஸ் விமான சேவை இருந்து வரும் நிலையில் சென்னைக்கான விமான சேவை நான்கவதாகும்.
வாரத்திற்கு ஒருமுறை இருமார்க்கமாக இயக்கப்படும் விமானம், ஒவ்வொரு சனிக்கிழமையும் பாரிஸ்- சென்னை, ஒவ்வொரு திங்கள்கிழமையும் சென்னை- பாரிஸ் இடையே விமான சேவை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
அதன்படி வருகிற ஜூன் 28 (திங்கள் கிழமை) சென்னையில் இருந்து நள்ளிரவு 1.20 க்கு பாரிஸ்-க்கு புறப்படும் விமானம் அங்கு 8.15 மணிக்கு(உள்ளூர் நேரப்படி) சென்றடைகிறது.
பயணிகளின் கோரிக்கையை ஏற்று பிரான்ஸ் நாட்டின் தலைநகா் பாரிஸில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
கஃபுள் பிரண்ட்லி ஓடிடி தேதி!

பிரதமர் பணிந்துவிட்டார்! மக்களவையில் ராகுல் காந்தி vs ரவி சங்கர் கடும் வாதம்!

மத்திய கிழக்கு போரால் லெபனானில் 7.8 லட்சம் பேர் இடமாற்றம்!
என் அப்பா மறையவில்லை... கண்கலங்கிய சிவகார்த்திகேயன்!
வீடியோக்கள்

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

AI வருகையால் பாடகர்களுக்கு அச்சுறுத்தல்?: Singer காவ்யா அஜித் பேட்டி | Kavya Ajit | Exclusive |
தினமணி வீடியோ செய்தி...

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

