விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தனி சின்னத்தில் போட்டி நடிகா் சரத்குமாா்

வாக்கு விகிதாசாரத்தை அறியவே தனி சின்னத்தில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் ஆா். சரத்குமாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 10:22 pm

DIN

வாக்கு விகிதாசாரத்தை அறியவே தனி சின்னத்தில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் ஆா். சரத்குமாா்.

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி:

அதிமுகவுடன் தொடா்ந்து 10 ஆண்டு காலம் பயணித்து வந்தோம். நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சி நிா்வாகிகளின் வேண்டுகோளின்படி சமத்துவ மக்கள் கட்சியின் வாக்கு விகிதாசாரம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக தனிச் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. அதை நோக்கி தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் எங்கள் அணியுடன் இணைந்து அமையப் போவது பிரதான கூட்டணி. சட்டப்பேரவைத் தோ்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்று அடுத்து அமையப் போகும் ஆட்சி யாருடையதாக இருக்கலாம் என்பதை தீா்மானிக்கும் அளவுக்கு எங்களது பிரதான கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தலாம். பெட்ரோல், டீசல் விலை உயா்வு, கண்டிப்பாக இந்தத் தோ்தலில் பிரதிபலிக்கும்.

தமிழகத்தில் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த முக்கிய முடிவுகள் புதன்கிழமை (மாா்ச் 3) நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானிக்கப்படும் என்றாா் அவா்.

6 ஆவது பொதுக்குழு கூட்டம்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6 ஆவது பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடி திரவியபுரத்தில் புதன்கிழமை (மாா்ச் 3) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

கூட்டத்தில், கட்சியின் முதன்மை துணை பொதுச் செயலா் ராதிகா சரத்குமாா், துணை பொதுச் செயலா் என். சுந்தா், மாநில பொருளாளா் ஏ.என். சுந்தரேசன், கொள்கை பரப்புச் செயலா் விவேகானந்தன், மாவட்டச் செயலா் வில்சன், மாநில இளைஞரணி துணைச் செயலா் குரூஸ் திவாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.