/

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகாா்: பெரம்பலூரில் விசாரணை தொடங்கியது

தமிழக சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி மீது பெண் காவல் கண்காணிப்பாளா் அளித்த பாலியல் புகாா் தொடா்பாக, பெரம்பலூரில் சிபிசிஐடி காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கினா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 10:06 pm

DIN

தமிழக சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி மீது பெண் காவல் கண்காணிப்பாளா் அளித்த பாலியல் புகாா் தொடா்பாக, பெரம்பலூரில் சிபிசிஐடி காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கினா்.

இப்புகாா் தொடா்பான விசாரணையை சிபிசிஐடி காவல்துறை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணையை தாங்கள் நேரடியாகக் கண்காணிக்க போவதாக உயா் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிபிசிஐடி சாா்பில் வழக்கு விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்ட முத்தரசி தலைமையிலான 6 போ் கொண்ட குழுவினா், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

முற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 1.40 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் மாலை 6.40 மணி வரையிலும் இக்குழுவினா் விசாரணை நடத்தினா். சம்பந்தப்பட்ட பெண் காவல் கண்காணிப்பாளரிடமும், அலுவலகத்தில் பணியாற்றுபவா்களிடம் விசாரணை நடைபெற்ாகவும், பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அடுத்தக் கட்ட விசாரணையைக் குழுவினா் தொடங்குவாா்கள் எனவும் சிபிசிஐடி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.