யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தஞ்சாவூரில் இளைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை

தஞ்சாவூரில்  திங்கள்கிழமை நள்ளிரவு இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
தஞ்சாவூரில் இளைஞர் அரிவாளால் வெட்டிக்கொலை
Updated On :2 மார்ச் 2021, 5:08 am

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூரில்  திங்கள்கிழமை நள்ளிரவு இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (19). இவர் திங்கள்கிழமை இரவு மருத்துவக் கல்லூரிப் பகுதியிலுள்ள உணவகத்தில் உணவு அருந்திவிட்டு நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

ரெட்டிப்பாளையம் சாலையில் சென்ற இவரை 5 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில், பலத்தக் காயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இவரது தலை துண்டிக்கப்பட்டு அருகே உள்ள கன்னியம்மன் கோயில் முன்புறமும், உடல் அருகில் உள்ள தண்டவாளத்திலும் வீசப்பட்டுக் கிடந்தது.

தகவலறிந்த மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் மணிகண்டனுக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த முத்துராமனுக்கும் இடையே ஏற்கெனவே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக மணிகண்டன் மீது மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முன் விரோதம் காரணமாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் கருதுகின்றனர்.

இதன் அடிப்படையில் முத்துராமன் உள்பட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.