ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேமுதிகவுக்கு இன்று தீபாவளி; அதிமுக டெபாசிட் இழக்கும்: எல்.கே. சுதீஷ்

அதிமுகவிலிருந்து விலகியிருக்கும் இந்த நாள் தேமுதிக தொண்டர்களைப் பொறுத்தவரை தீபாவளி என்று தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.

News image
தேமுதிகவுக்கு இன்று தீபாவளி; அதிமுக டெபாசிட் இழக்கும்: எல்.கே. சுதீஷ்
Updated On :9 மார்ச் 2021, 8:02 am

DIN

சென்னை: அதிமுகவிலிருந்து விலகியிருக்கும் இந்த நாள் தேமுதிக தொண்டர்களைப் பொறுத்தவரை தீபாவளி என்று தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று அறிவித்தார்.

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வந்த நிலையில், இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அளவிலான அவசர ஆலோசனைக் கூட்டம் கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆலோசனைக் கூட்டத்திலிருந்து வெளியே வந்த எல்.கே சுதீஷ் பேசுகையில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற தொகுதிப் பங்கீடு குறித்தப் பேச்சுவார்த்தையில் நாங்கள் கேட்ட தொகுதி எண்ணிக்கையும், கேட்ட தொகுதிகளையும் வழங்க அதிமுக தயாராக இல்லை. எனவே, கூட்டணியிலிருந்து வெளியேறுவது என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுதான் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் தீபாவளி. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படும். 

தமிழகத்தில் அதிமுகவை தோற்கடிக்க தேமுதிக தொண்டர்கள் பணியாற்றுவார்கள். அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என்று எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.