முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

திடீர் கோடை மழை: சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டம் சுருளி அருவி வனப்பகுதியில் திடீரென்று கோடை மழை பெய்ததால் அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

News image
சுருளி அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு
Updated On :11 மார்ச் 2021, 7:18 am

DIN

தேனி மாவட்டம் சுருளி அருவி வனப்பகுதியில் திடீரென்று கோடை மழை பெய்ததால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம்  கம்பம் அருகே உள்ளது, சுருளி அருவி, கடந்த மார்ச் 3ஆம் தேதி அருவிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் குறைந்தது. கடும் வெயிலால் அருவிக்கு நீர்வரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை நீர் ஊற்று ஓடைகள் வறண்டது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு திடீரென்று கோடைமழை, மேற்கு மலை தொடர்ச்சி அடிவாரப்பகுதிகளான, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன் பட்டி, சுருளிப்பட்டி  கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்தது. இதனால் பகல் முழுவதும் கடும் வெயிலால் அவதியடைந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கால்நடைகள், வாடி வறண்ட மரம், செடி, கொடிகள் குளிர்ந்த நிலையை அடைந்தது.

இதற்கிடையில் சுருளி அருவிக்கு நீர்வரத்து தரும் வனப்பகுதிகளில் உள்ள நீரூற்றுகளில், நீர்வரத்து ஏற்பட்டு, அருவியில் தண்ணீர் வியாழக்கிழமை அதிகாலை முதல் கொட்டியது. தற்போதைய நிலையில், கரோனா தொற்று பரவலால் அருவியில் குளிக்கத் தடை இருப்பதால், கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் அருவிப்பகுதியை கண்காணித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.