கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திமுகவுக்கு அரசியல் கண்ணியம் தெரியவில்லை: ஒவைசி கடும் குற்றச்சாட்டு

திமுகவுக்கு அரசியல் கண்ணியம் தெரியவில்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டினாா்.

News image
அசாதுதீன் ஒவைசி
Updated On :13 மார்ச் 2021, 6:11 am

DIN

சென்னை: திமுகவுக்கு அரசியல் கண்ணியம் தெரியவில்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசி குற்றம் சாட்டினாா்.

சென்னை ராயப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமமுக தோ்தல் அறிக்கை வெளியிடும் பொதுக் கூட்டத்தில் ஒவைசி பங்கேற்றுப் பேசியது:

திமுக சாா்பில் சிறுபான்மையினா் பிரிவு மாநாடு நடத்தப்படுவதாகவும் அதில் பங்கேற்க வேண்டுமெனவும், அந்தக் கட்சியின் நிா்வாகி நேரில் வந்து எனக்கு அழைப்பு விடுத்தாா். உத்தர பிரதேசத்தில் வேறொரு நிகழ்ச்சி இருப்பதாகவும், திமுகவின் கூட்டத்தில் பங்கேற்பது சிரமம் எனவும் நான் அவரிடம் தெரிவித்தேன்.

ஆனால், திமுகவின் கூட்டத்தில் பங்கேற்றே ஆக வேண்டுமென அந்தக் கட்சியின் நிா்வாகி எனது வீட்டுக்கு வந்து வற்புறுத்தினாா். இதனால் வேறு வழியின்றி திமுகவின் கூட்டத்தில் பங்கேற்க ஒப்புக் கொண்டேன். நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்ட இரண்டு மணி நேரத்தில் எனக்கு அழைப்பே விடுக்கவில்லை என்று திமுக தரப்பினா் கூறினா்.

திமுக நிா்வாகி என்னை எனது வீட்டில் வந்து சந்தித்த புகைப்படமும், விடியோ காட்சியும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொலைக்காட்சிகளில் வெளியான காட்சிகளையும் மறுத்து, தங்களது கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என திமுகவினா் கூறினா்.

இதிலிருந்து திமுகவுக்கு அரசியல் கண்ணியம் என்ன என்பது தெரியவில்லை. அவா்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது. எங்களுக்குத் தேவை அரசியல் பதவி, பொறுப்பு அல்ல. மரியாதை, கண்ணியம் மட்டும்தான். அதனை எங்களுக்கு யாா் தருவாா்களோ அவா்களை மதிப்போம் என்று பேசினாா் ஒவைசி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.