குண்டர்கள் முழுவதும் தி.மு.க.வில் தான் நிறைந்துள்ளார்கள்: முதல்வர்
குண்டர்கள் முழுவதும் தி.மு.க.வில் தான் நிறைந்துள்ளார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.


குண்டர்கள் முழுவதும் தி.மு.க.வில் தான் நிறைந்துள்ளார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி இன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீர்காழியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆற்றிய உரை, அதிமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் செய்யவில்லை என்று ஸ்டாலின் கூறிவருகிறார். இந்த சீர்காழி தொகுதியில் மட்டும் என்னென்ன திட்டங்களை செய்துள்ளோம் என்று கூறுகின்றேன். மக்களாகிய நீங்களே நீதிபதியாக இருந்து தீர்ப்பை கூறுங்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சரானார் என்று ஸ்டாலின் பேசி வருகிறார்.
ஒரு கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நான் முதலமைச்சரானேன். இது அனைவருக்கும் தெரியும். என்னைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை. நான் முதலமைச்சராக ஆன பிறகு சட்டமன்றத்திலே பெரும்பாண்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு போட்டார். அப்படி பெரும்பாண்மையை நிரூபிக்கின்ற வேலையிலே, என்ன அட்டகாசம் செய்தார்கள். குண்டர்களை எல்லாம் அப்போது அங்கு தான் பார்த்தேன். குண்டர்கள் முழுவதும் தி.மு.கவில் தான் நிறைந்துள்ளார்கள். எழுந்து மேசையின் மீது நடனமாடுகிறார்கள்.
புத்தகத்தை தூக்கி வீசுகிறார்கள். இதற்கு எல்லாவற்றிற்கும் மேல் நீதிபதி இருக்கைக்கு சமமான சபாநாயகர் இருக்கைக்கு சென்று சபாநாயகரை கீழே தள்ளிவிட்டு அமர்ந்த கொடுமையை நான் பார்த்தேன். நீங்கள் அனைவரும் ஓட்டுப் போட்டு எம்.எல்.ஏ ஆக தேர்ந்தெடுத்தது இதற்காகவா? உங்கள் கோரிக்கைகளை சட்டமன்றத்திலே ஒலிக்க தேர்ந்தெடுத்தால், சட்டமன்றத்திலே ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள் தி.மு.கவினர். நாங்கள் பெரும்பாண்மையை நிரூபித்த உடன் சட்டையைக் கிழித்துக் கொண்டு வெளியிலே செல்கிறார் ஸ்டாலின்.
குறிப்பிட்ட சில எம்.எல்.ஏக்களை தூக்கிக் கொண்டு சென்றார்கள். இன்றைக்கு அவர்கள் நடு ரோட்டில் விடப்பட்டார்கள். இருபெரும் தலைவர்களின் அருளாசியோடு கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றினோம். இந்த சண்டாலர்களின், இவ்வளவு தொல்லையைத் தாண்டிதான் அரசினை வழிநடத்தினேன். வாரிசு என்று சொல்லக் கூடாதாம். எங்கள் கட்சியிலும் வாரிசு இருக்கின்றதாம். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கின்றது. எங்களுடைய வாரிசுகள் எம்.எல்.ஏ. ஆகலாம் தப்பில்லை. ஆனால், வாரிசுகள் கட்சித் தலைவர் ஆவதுதான் தவறு.
நிறைய பேர் உழைக்கின்றார்கள் அவர்கள் தான் கட்சி தலைமைக்கு வரவேண்டும். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடாதீர்கள் ஸ்டாலின் அவர்களே. அந்த கட்சிக்கு அடுத்த தலைவர் ஒரே குடும்பத்தில் இருந்து வருவதுதான் வாரிசு அரசியல். கருணாநிதி, அதன்பிறகு ஸ்டாலின், அதன் பிறகு உதயாநிதி. இதுதான் வாரிசு அரசியல். இதைத்தான் நாங்கள் கூடாது என்கின்றோம். மக்களும் இதைத்தான் வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...