காலை 8 - 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் இயங்கும்
நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (மே 6) முதல் நண்பகலுக்குப் பிறகு ஊரடங்கு நேரம் அமலுக்கு வருவதால் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய கடைகள் காலை முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: இங்கே கிளிக் செய்யவும்...
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளும் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன.
இதனிடையே கரோனா ஊரடங்கின் காரணமாக நாளை முதல் 4 மணிநேரம் மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...