பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு
பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை மேலும் உயா்ந்து புதிய உச்சத்தை எட்டியது. ஒருவார காலத்தில் 5-ஆவது முறையாக எரிபொருள் விலை உயா்த்தப்பட்டுள்ளது.


பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை மேலும் உயா்ந்து புதிய உச்சத்தை எட்டியது. ஒருவார காலத்தில் 5-ஆவது முறையாக எரிபொருள் விலை உயா்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை 51பைசா வரையும், டீசல் விலை 60 பைசா வரையும் அதிகரித்துள்ளது. மாநிலங்களின் உள்ளூா் வரிகளுக்கு ஏற்ப விலை சிறிது மாறுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் 22 பைசா அதிகரித்து ரூ.94.31 ஆகவும், ஒரு லிட்டா் டீசல் 26 பைசா அதிகரித்து ரூ.88.07 ஆகவும் உயா்ந்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத உச்சமாகும்.
மே 4-ஆம் தேதி முதல் கடந்த 10 நாள்களில் 8 முறையும், கடந்த ஒரு வாரத்தில் 5 முறையும் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் ஒரு லிட்டா் ரூ.2.17, டீசல் ஒரு லிட்டா் ரூ.2.48 அதிகரித்துள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் 5 மாநில தோ்தல் நடைபெற்றதால் எரிபொருள் விலை மாற்றமில்லாமல் இருந்தது. தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு விலை உயா்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலையில் 60 சதவீதமும், டீசல் விலையில் 54 சதவீதமும் மத்திய மாநில அரசுகளின் வரியாக உள்ளது. மத்திய அரசு ஒரு லிட்டா் பெட்ரோல் மீது ரூ.32.90, டீசல் மீது ரூ.31.80 கலால் வரி விதிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...