ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ராஜகோபாலனுக்கு எதிரான ஆதாரங்கள் உள்ளன: சென்னை காவல் ஆணையர் பேட்டி

ராஜகோபாலன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

News image
சங்கர் ஜிவால்
Updated On :28 மே 2021, 11:31 am

DIN

ராஜகோபாலன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

சென்னை கே.கே. நகா் தனியாா் பள்ளியில் பணியாற்றி வரும் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபால், ஆன்லைன் வகுப்புகளில் இரட்டை அா்த்தத்திலும், ஆபாசமாகவும் பேசியதாகவும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் இவரிடம் படித்து வரும் ஒரு மாணவி சமூக ஊடகத்தில் குறிப்பிட்டிருந்தாா்.

மாணவியின் புகாா் தொடா்பாக விசாரித்த சென்னை பெருநகர காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவினா், ஆசிரியர் ராஜகோபாலை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், 

பள்ளியில் நடந்த பாலியல் தொல்லை, ஒரு மனிதருக்கு எதிரான சம்பவம் அல்ல. இது ஒரு சமூகத்திற்கு எதிரான சம்பவம். 

குற்றவாளி கைது செய்யப்பட்டு போக்ஸோவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு எதிராக ஆதாரங்கள் இருக்கின்றன. இதுபோன்று பாதிப்புக்கு உள்ளவர்கள் நேரடியாக தொடர்புகொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிட மாட்டோம். மேலும் இருவர் வந்து புகார் கொடுத்திருக்கிறார்கள். 

அதேபோன்று மற்றொரு பள்ளியின் மீதும் புகார் வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் முறையாக புகார் கொடுத்தால் விசாரணை தொடங்கப்படும். 

சமூக வலைத்தளங்கள் மூலமாக வரும் புகார்களையும் யார் வேண்டுமானலும் எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வரலாம். நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.