தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நடிகா் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை: பெங்களூரு போலீஸார் விளக்கம்

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகா் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர். 

News image

நடிகர் விஜய் சேதுபதி.

Updated On :4 நவம்பர் 2021, 7:32 am

DIN

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகா் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர். 

கா்நாடக மாநிலம், ராமநகா் மாவட்டம், பிடதியில் உள்ள படப்பிடிப்புத் தளத்தில் நடைபெறும் தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு வந்து, அங்கிருந்து பிடதிக்கு நடிகா் விஜய் சேதுபதி சென்று வருகிறாா்.

செவ்வாய்க்கிழமை (நவ. 2) நடிகா் விஜய் சேதுபதி அவரது உதவியாளருடன் சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு வரும் போது, சக பயணி ஒருவா் விஜய் சேதுபதியின் உதவியாளரிடம் தகராறில் செய்துள்ளாா். அந்தபயணி மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இரவு 11 மணி அளவில் விமானம் பெங்களூரில் தரையிறங்கியதும் விஜய் சேதுபதியும், அவரது உதவியாளரும் விமான நிலையத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, விமானத்தில் அவா்களுடன் தகராறு செய்தவா் திடீரென ஓடி வந்து விஜய் சேதுபதியை எட்டி உதைத்தாா். இதில் விஜய் சேதுபதி நிலைதடுமாறினாா்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொழில் பாதுகாப்பு படையினா் விஜய் சேதுபதியை கீழே விழாமல் தாங்கிப் பிடித்தனா். மேலும், அவரது உதவியாளரும் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.  

இதுகுறித்து விமான நிலைய காவல்நிலையத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளா் புகாா் அளித்துள்ளதாக செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது. 

இந்நிலையில், விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில் என்றும்,  விஜய் சேதுபதிக்கு வழி ஏற்படுத்தும் முயற்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரின் உதவியாளர் மீதுதான் தாக்குதல் நடந்ததாகவும், தாக்குதலில் ஈடுபட்டவரிடம் மன்னிப்புக் கடிதம் வாங்கிக் கொண்டு, வழக்குப் பதிவு செய்யாமல் விடுவித்ததாக போலீஸாா் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.