கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.154.48 கோடி வருவாய்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.154.48 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 12:15 am

DIN

தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.154.48 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவ.1, 2, 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 17,694 பேருந்துகளுடன், 966 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 4 கோடியே 33 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இதன் வாயிலாக ரூ.80 கோடியே 12 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.12 கோடி அதிகம்.

தீபாவளிக்கு பின்பு, நவ.5, 6, 7 8 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 15,903 தினசரி பேருந்துகளுடன், 519 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 3 கோடியே 93 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இதன் வாயிலாக ரூ.74 கோடியே 36 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூ.7 கோடியே 39 லட்சம் கூடுதல். இவ்வாறு 8 நாள்களில் இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் ரூ.154.48 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

தீபாவளியையொட்டி, தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 57 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்ததன் வாயிலாக ரூ.8 கோடியே 37 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.