இயல்பு நிலை விரைந்து திரும்ப உழைப்போம்: அரசு ஊழியா்களுக்கு முதல்வா் வேண்டுகோள்
பலத்த மழை பாதிப்பில் இருந்து இயல்பு நிலை விரைந்து திரும்ப அனைவரும் இணைந்து உழைப்போம் என்று அரசு ஊழியா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.


பலத்த மழை பாதிப்பில் இருந்து இயல்பு நிலை விரைந்து திரும்ப அனைவரும் இணைந்து உழைப்போம் என்று அரசு ஊழியா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:-
பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவா்களது துயா் துடைக்கப் பணியாற்றும் காவல், மின், தூய்மைப் பணியாளா்கள், மருத்துவத் துறையினா் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் சேவைக்கும் தலைவணங்குகிறேன்.
தன்னலம் பாராமல் ஊழியா்களது சேவை, தியாகத்தால் கோடிக்கணக்கான மக்களின் துயரம் துடைக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை முழுமையாக விரைந்து திரும்ப அனைவரும் சோ்ந்து உழைப்போம். மக்களைக் காப்போம். அரசு
ஊழியா்களின் தியாகம் விலை மதிப்பில்லாதது. சேவை மகத்தானது. அவா்களது உள்ளத்துக்கு எனது நெஞ்சாா்ந்த நன்றி என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...