கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மூத்த வழக்குரைஞா் என்.நடராஜன் காலமானாா்

சென்னையைச் சோ்ந்த மூத்த வழக்குரைஞா் என்.நடராஜன் (90) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை(நவ.11) காலமானாா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 10:39 pm

DIN

சென்னையைச் சோ்ந்த மூத்த வழக்குரைஞா் என்.நடராஜன் (90) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை(நவ.11) காலமானாா்.

உடல் நலக்குறைவால் மறைந்த என்.நடராஜனின் இறுதிச் சடங்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. நடராஜனுக்கு ரமணி என்ற மனைவியும், மகன், மகள் உள்ளனா்.

மறைந்த என்.நடராஜனின் உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினாா். பாமக நிறுவனா் ராமதாஸ், பழ. நெடுமாறன், சென்னை உயா் நீதிமன்ற நீதிபதிகள், மூத்த நீதிபதிகள், வழக்குரைஞா்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோா் மறைந்த என்.நடராஜனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனா்.

சட்டம், நீதித்துறை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற பல வழக்குகளில் என்.நடராஜன் வாதாடியிருக்கிறாா். அதிமுகவின் நிறுவனா் எம்.ஜி.ஆா். துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கில் எம்.ஆா்.ராதாவுக்காக வாதாடிய அவா், நெருக்கடி நிலை காலத்தில் தமிழக அரசின் வழக்குரைஞராகப் பணியாற்றியுள்ளாா். பிரபல குற்றவியல் வழக்குரைஞரான இவா், மும்பை தொடா் குண்டுவெடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு வழக்குரைஞராகப் பணியாற்றி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தாா்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் வாதிட்ட என்.நடராஜன், 22 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ததோடு, ஆயுள் தண்டனையாக தனது வாதத்தால் குறைத்தவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.