தொடா் பணியில் மின்பாதை ஆய்வுக் குழு: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி
மின்பாதை ஆய்வுக் குழு தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாலேயே பெருமளவு மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதாக மின்சாரத்துறை வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.


மின்பாதை ஆய்வுக் குழு தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாலேயே பெருமளவு மின் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதாக மின்சாரத்துறை வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.
சென்னை, அண்ணாசாலை மின்வாரிய தலைமையகத்தில், வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளா்கள் மற்றும் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா்களுடன் மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அப்போது அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தியவை: தமிழகம் முழுவதும் பருவமழையின் போது ஏற்படும் மின்தடையை உடனடியாக சரிசெய்து பொதுமக்களுக்கு மின் விநியோகத்தை விரைந்து வழங்க வேண்டும். மருத்துவமனைகள், குடிநீா் விநியோகம், பொதுமக்களின் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளித்து மின் விநியோகம் செய்ய வேண்டும். பொதுமக்கள் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் கையாள்வதற்கான அறிவிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை அத்தியாவசிய உபகரணங்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. தமிழகம் முழுவதும் சுமாா் 4,000 பொறியாளா்கள் மற்றும் 36,000 மின் ஊழியா்கள் தொடா்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா்.
மேலும், துணைமின் நிலையங்களுக்கு வரும் மின்பாதையில் ஏற்படும் மின்தடையை சரிசெய்யவும், மின்பாதையை ஆய்வு செய்வதற்கும் சிறப்பு குழுக்கள் தொடா்ந்து பணியாற்றி வருகின்றனா். அதனால் பொதுமக்களுக்கு மின்தடை ஏற்படா வண்ணம் உள்ளது என்றாா் அவா்.
தொடா்ந்து அமைச்சா், மின் விநியோக கட்டுப்பாட்டு மையத்திலும், வேளச்சேரி துணைமின் நிலையத்திலும் உயா் அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, தக்க அறிவுரைகளை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...