தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல மாவட்டங்களில் இன்று வெள்ளிக்கிழமை(நவ.12)10 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் தீவிரமடைந்த நிலையில், புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் நவம்பா் 9-ஆம் தேதி உருவானது. இது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக மாறி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்தது. மேலும் வலுவடைந்து கடந்த புதன்கிழமை இரவு காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறியது. தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வந்தது. வியாழக்கிழமை காலையில், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து தெற்கு ஆந்திர கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே வியாழக்கிழமை மாலை கடந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
குறைந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே நேற்று வியாழக்கிழமை மாலை 5.15 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது. அப்போது, திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசியது. நேற்று வியாழக்கிழமை இரவு 7.45 மணிக்குள் காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் முழுமையாக கடந்தது.
இந்த நிலையில் அடுத்த நான்கு நாள்களுக்கு மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்வதால், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் இன்று வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
அதேபோன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


