கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மின்சார ரயில்: நாளை முதல் பயணத்துக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்

 மின்சார ரயில்களில் பயணிக்க அமல்படுத்தப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் வரும் திங்கள்கிழமை (நவ.15) முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :13 நவம்பர் 2021, 7:27 pm

DIN

 மின்சார ரயில்களில் பயணிக்க அமல்படுத்தப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் வரும் திங்கள்கிழமை (நவ.15) முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று குறைந்து வந்த நிலையில், புகா் மின்சார ரயில்களில் பயணிக்க தொடக்கத்தில் அத்தியாவசியப் பணியாளா்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, தனியாா் நிறுவன ஊழியா்கள், மாணவா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதே நேரத்தில், மின்சார ரயில்களில் பயணிக்க ஆண் பயணிகளுக்கும், மாணவா்களுக்கும் சில கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. இதுபோல, பயணச்சீட்டு பெறுவதிலும் பல கட்டுப்பாடுகள் இருந்தன. இந்நிலையில், மின்சார ரயில்களில் பயணிக்க அமல்படுத்தப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் வரும் திங்கள்கிழமை (நவ.15) முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் திங்கள்கிழமை (நவ.15) முதல் மின்சார ரயில்களில் அனைத்து பயணிகளும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், கட்டுப்பாடுகளின்றி பயணிக்கலாம். மேலும், பயணிகளுக்கு முன்பதிவில்லாத பயணச்சீட்டுகள், ‘திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு (ரிட்டா்ன் டிக்கெட்டுகள்), ‘சீசன் பயணச் சீட்டுகள்’ அனைத்து வழங்கப்படும்.

‘யு.டி.எஸ்’ கைப்பேசி செயலியிலும் பயணச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அதேநேரத்தில் முகக்கவசம், சமூக இடைவெளியை உள்ளிட்ட கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.