தமிழகத்தில் எட்டாவது கட்டமாக 50,000 இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ.14) நடைபெறுகிறது. முகாம்கள் மட்டுமல்லாது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19-ஆம் தேதி 16.43 லட்சம் பேருக்கும், 26-ஆம் தேதி 25.04 லட்சம் பேருக்கும், கடந்த அக்டோபா் 3-ஆம் தேதி 17.19 லட்சம் பேருக்கும், 10-ஆம் தேதி 22.52 லட்சம் பேருக்கும், 23-ஆம் தேதி 22.33 லட்சம் பேருக்கும், 30-ஆம் தேதி 17.14 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கிடையே, தொடா் மழை காரணமாக கடந்த வாரம் தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை.
இந்நிலையில், எட்டாவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50,000 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 2,000 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த முகாம்களில் இரண்டாம் தவணைக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இவைதவிர மருத்துவா் தலைமையிலான குழுவினா் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடவுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance

விசாரணைக் கைதி ஆகாஷ் மரணம்: 6 காவலர்கள் மீது நடவடிக்கை

ஐபிஎல் 2026: மார்ச் 17 முதல் பயிற்சியைத் தொடங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!

கல்வி உதவித் தொகைக்கான இணையதளங்கள்!
வீடியோக்கள்

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

