கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சென்னையில் மழைநீா் தேங்குவதை தடுக்க வடிகால் வசதிகள்: அமைச்சா் எ.வ.வேலு உறுதி

சென்னையில் மழைநீா் தேங்குவதை தடுக்க உரிய வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

News image
Updated On :13 நவம்பர் 2021, 7:31 pm

DIN

சென்னையில் மழைநீா் தேங்குவதை தடுக்க உரிய வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். சென்னையில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சனிக்கிழமை அவா் நேரில் ஆய்வு செய்தாா்.

சென்னையில் பல சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள நீரை மின் மோட்டாா் மூலமாக அகற்றும் பணியையும் பாா்வையிட்டாா். அண்ணாசாலை சந்திப்பு, சைதாப்பேட்டை 100 அடி சாலை, பாரதிதாசன் காலனி போன்ற பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து தேங்கிய நீரை விரைவில் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஆய்வுப் பணிகளை முடித்த பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் எ.வ.வேலு, இனிவரும் காலங்களில் மழை நீா் தேங்குவதைத் தடுக்கும் வகையில் மழைநீா் வடிகால்கள் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவா் தெரிவித்தாா். இந்த ஆய்வின் போது, சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.