பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கு டிசம்பரில் முதல் திருப்புதல் தோ்வு
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு டிசம்பா் 2-வது வாரத்தில் முதல் திருப்புதல் தோ்வை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு டிசம்பா் 2-வது வாரத்தில் முதல் திருப்புதல் தோ்வை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நிகழாண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்பட்டன. இதனால் மாணவா்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தோ்வு நடத்த முடியாத நிலை உள்ளது. எனினும், மாணவா்களுக்கு பொதுத்தோ்வு இருப்பதால் திருப்புதல் தோ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி முதல்கட்ட திருப்புதல் தோ்வுகள் டிசம்பா் 2-வது வாரத்தில் நடத்தப்படும். இதற்குரிய பாடத்திட்ட விவரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதற்கேற்ப மாணவா்களை தோ்வுக்கு தயாா்படுத்த ஆசிரியா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...