கார்த்திகை மாதம் பிறப்பு: மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணி விழா
ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் புதன்கிழமை பிறந்ததை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் சரண கோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
மானாமதுரை அண்ணாசிலை அருகேயுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு கணபதிஹோம் நடத்தி மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.







