வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஈரோடு அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

News image
விபத்தில் சுக்குநூறாக நொறுங்கிய கார்.
Updated On :18 நவம்பர் 2021, 10:14 am

DIN

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் காரில் சென்ற மூன்று பேர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள முத்துகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 8 பேர் இன்று காலை ஆம்னி வாடகைக் காரில் பழனி முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு காரில் வந்து கொண்டிருந்தனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி அருகே வரும்போது எதிரே வந்த சிமெண்ட் லாரியில் மோதி கார் சுக்குநூறாகி விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர் படையப்பா, காரில் வந்த தெய்வானை, மஞ்சுளா, அருக்காணி, தேன்மொழி என 4 பெண்கள், டிரைவர் படையப்பா ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் காரில் வந்த குமரேசன், மோகன்குமார், முத்துசாமி ஆகிய 3 பேரும் உயிர் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஈரோடு டவுன் டிஎஸ்பி., மோகனசுந்தரம், சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து நடைபெற்ற இடத்தில் அடிக்கடி விபத்து நடைபெற்று உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. எனவே, இந்த பகுதியில் சாலையை அகலப்படுத்தி அல்லது வேகத்தடை அமைக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டிஎஸ்பி.-யை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு அருகே விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.