பாகூர் பகுதியில் ஆய்வுக்குச் சென்ற போது, அவர்களுடன் புதுச்சேரி வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி வந்தார். அவரை அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் விரட்டினர். புதுவையில் விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு தொடர்பான திட்டக் கோப்புகளில் கையொப்பமிடாமல் திருப்பி அனுப்புவது, மழை பெய்து பல நாள்களாகியும் பார்வையிட வராதது, தற்போது மத்தியக் குழு வந்தவுடன் பெயருக்கு என்று ஆய்வுக்கு வருவது உள்ளிட்ட காரணங்களால் அவரை உள்ளே வரக்கூடாது எனக் கூறி விவசாயிகள் விரட்டினர். அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.