அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழகத்தில் புதிதாக 1,449 பேருக்கு கரோனா; 16 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,449 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 16 பேர் உயிரிழந்தனர்.

News image
தமிழகத்தில் புதிதாக 1,449 பேருக்கு கரோனா; 16 பேர் பலி
Updated On :5 அக்டோபர் 2021, 1:42 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,449 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 16 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று  1,467 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,  இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை செவ்வாய்க் கிழமை (அக்.5) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிதாக 1,449 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை  26,71,411-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு நாளில் மட்டும் 16 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,682-ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 16 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனைகளில் ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை.

கரோனாவிலிருந்து 1,548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,18,980-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,749 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,46,219 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு...

சென்னை -179 கோவை 151, செங்கல்பட்டு 113, ஈரோடு 93, தஞ்சாவூர் 83, திருப்பூர் 72, திருச்சி 51, திருவாரூர் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.