கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

’கரம் கோர்ப்போம், பகை வெல்வோம்’: தொண்டர்களுக்கு சசிகலா திடீர் கடிதம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

News image
சசிகலா தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்
Updated On :19 அக்டோபர் 2021, 8:52 am

DIN

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வெளியே வந்த பிறகு தான் அரசியலிலிருந்து முழுமையாக விலகுவதாக சசிகலா அறிவித்தார். எனினும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்ட சசிகலா தனது ஆதரவாளர்களுடன் உரையாடும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுகவின் பொன்விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். நினைவில்லத்தில் மரியாதை செலுத்திய சசிகலா கல்வெட்டு ஒன்றை திறந்து வைத்தார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எனக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது.

கல்வெட்டு பரபரப்பு ஓய்வதற்குள் இன்று டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில், ‘அம்மா வழிநின்று கழகம் காப்போம் கரம் கோர்ப்போம், பகை வெல்வோம்’ என்ற தலைப்பில் வி.கே. சசிகலா எழுதிய கடிதம்  என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கடிதத்திலும், இறுதியில் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.