கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சுவர் இடிந்து கூரை வீட்டின் மீது விழுந்ததில் முதியவர் பலி; பெண் காயம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த களப்பால் குலமாணிக்கம் தென் பாதி தெருவை சேர்ந்தவர் சு.மாரிமுத்து

News image
சுவர் இடிந்து கூரை வீட்டின் மீது விழுந்ததில் பலியான முதியவர் மாரிமுத்து
Updated On :19 அக்டோபர் 2021, 5:24 am

DIN


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த களப்பால் குலமாணிக்கம் தென் பாதி தெருவை சேர்ந்தவர் சு.மாரிமுத்து (65). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மு.அருமைக்கண்ணு (52). திங்கள்கிழமை இரவு, மாரிமுத்து, மனைவி சுந்தரம்பாள் (55) ஆகியோர் தங்களின் கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அருமைக் கண்ணுவின் ஓட்டு வீட்டின் கிழக்குக் பகுதி மண் சுவர் திடீரென இடிந்து, மாரிமுத்து கூரை வீட்டின் மீது விழுந்ததில் கூரை வீட்டின் சுவரும் இடிந்து மாரிமுத்து, சுந்தரம்மாள் ஆகியோர் மீது விழுந்தது.

இதில், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்குக்  கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியில் மாரிமுத்து உயிரிழந்ததாக தெரிவித்ததுடன், சுந்தரம்பாளுக்கு முதலுதவி அளித்து தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கடந்த சில நாள்களாக இப்பகுதியில் பெய்யும் கனமழைக் காரணமாக , மண் சுவர் ஊறியிருந்த நிலையில், நேற்றிரவு இடிந்து விழுந்துள்ளதாக  தெரிய வந்துள்ளது.

சுவர் இடிந்து விழுந்த செய்தி அறிந்து அன்று இரவே பாதிப்படைந்த வீடுகளை பார்வையிட்டதுடன், காயமடைந்தவர்களை  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியினை திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து செய்தார். 

அப்போது, கோட்டூர் ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை முருகேசன், சிபிஐ ஒன்றியச் செயலர் எம்.செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

உயிரிழந்த மாரிமுத்து குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமும் புதிய கான்கிரீட் வீடும் கட்டித் தர வேண்டும் என எம்எல்ஏ மாரிமுத்து கோரிக்கை விடுத்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.