இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் செப். 3-6 வரை அனுமதியில்லை

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் அங்காளம்மன் கோயிலில் செப்டம்பர் 3 முதல் 6-ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

News image
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் செப். 3-6 வரை அனுமதியில்லை
Updated On :1 செப்டம்பர் 2021, 3:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் அங்காளம்மன் கோயிலில் செப்டம்பர் 3 முதல் 6-ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மேலும், கரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 6-ஆம் தேதி அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவமும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் வார இறுதி நாள்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களுக்கு அனுமதியில்லை என்று ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமாவாசையையொட்டி அதிக அளவில் பக்தர்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் மேல்மலையனுர் அங்காளம்மன் கோயிலில் செப்டம்பர் 3 முதல் 6-ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.