மேற்படி புகாரின் பேரில் சென்னை, மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் ஆள்மாறாட்டம், மோசடி, இணையவழியில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது, விசாரணையில் தில்லியில் இருந்து மோசடி கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது, உடனடியாக தனிப்படை காவலர்கள் தில்லி விரைந்துச் சென்று புது தில்லி உத்தம் நகரில் தங்கியிருந்து மேற்படி மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பாலினஸ் சிகேலுவோ வயது 31 மற்றும் சிலிட்டஸ் இகேசுக்வு வயது 23 ஆகியோரை ஆகஸ்ட் 31 அன்று கைது செய்து விசாரணைக்குப் பிறகு அவர்களிடமிருந்து மோசடி செயல்களுக்கு பயன்படுத்திய செல்லிடப்பேசி, மடிக்கணினிகள், வங்கிகணக்கு அட்டைகள் மற்றும் பணம் ரூ.4,30,000 ஆகியவற்றை கைப்பற்றியும், பின்பு அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்கள்.