ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதிய உயர்வு அறிவிப்போடு நின்று விட்டது: முதல்வர்

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதிய உயர்வு வெறும் அறிவிப்போடு நின்று விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 12:46 pm

DIN

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதிய உயர்வு வெறும் அறிவிப்போடு நின்று விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஓய்வூதியத்தை உயர்த்தித் தரவேண்டுமென்று சொன்னார்கள். ஏற்கெனவே 20 ஆயிரம் ரூபாயிலிருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், உயர்த்தப்பட்டது வெறும் அறிவிப்போடு நின்று விட்டது. 

அந்த அறிவிப்புதான் இன்றுவரையில் இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு முறைப்படி சட்டமன்றத்திலே சட்டமுன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அதை நிறைவேற்றவில்லை. கடந்த ஆட்சி அதைச் செய்யவில்லை. ஆனால், தி.மு.க. ஆட்சி அமைந்ததற்குப்பிறகு, - இன்னும் ஒரு நாள்தான் சட்டமன்றம் நடைபெறவிருக்கிறது. திங்கட்கிழமையுடன் அவைக் கூட்டம் முடியவிருக்கிறது. 
திங்கட்கிழமை அன்று, 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கிடும் வகையில், சட்டமுன்வடிவினை இந்த அவையிலே கொண்டுவந்து, நிறைவேற்றித் தரப் போகிறோம் என்ற செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.