சேலத்தில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம்: காவல்துறையினருடன் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் தள்ளுமுள்ளு
சேலத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முற்பட்டதால் வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரி அம்மன் கோயிலுக்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்த பாஜக மற்றும் இந்து முன்னணியினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.








