இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆளிப்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில் நாட்டு கை துப்பாக்கி: போலீசார் விசாரணை

மணப்பாறை அடுத்த ஆளிப்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில் கிடந்த நாட்டு கை துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

News image
மணப்பாறை அருகேயுள்ள ஆளிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில்
Updated On :11 செப்டம்பர் 2021, 6:58 am

DIN

மணப்பாறை அடுத்த ஆளிப்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில் கிடந்த நாட்டு கை துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள ஆளிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் முன்பு சனிக்கிழமை காலை நாட்டு கை துப்பாக்கி ஒன்று அங்குள்ள சிறுவர்களின் கைகளில் கிடந்துள்ளது. 

இதனைக் கண்ட அப்பகுதியினர் துப்பாக்கி, துப்பாக்கி கவர் மற்றும் இரும்பு குண்டு தோட்டாக்களை கோயிலில் வைத்து பூட்டிவிட்டு, வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து நிகழ்விடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீஸார் கை துப்பாக்கியை ஆய்வு செய்து, அப்பகுதியினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Story image

ஆளிப்பட்டி மாரியம்மன் கோயில் வளாகத்தில் கிடந்த நாட்டு கை துப்பாக்கி.

மேலும் இது குறித்து திருச்சி துப்பாக்கி பராமரிப்பு பிரிவு போலீஸார் ஆய்வு செய்து, கை துப்பாக்கியின் ரகம் குறித்து தெரிவிப்பார்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே உறையுடன் கை துப்பாக்கி மற்றும் குண்டுகளை விட்டு சென்றது யார், வேட்டைக்காக பயன்படுத்தபட்டதா என்பது குறித்து மணப்பாறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயில் முன்பு துப்பாக்கி கிடக்கும் சம்பவமறிந்து சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.