இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தாம்பரம், ஆவடியில் புதிய காவல் ஆணையரகம்: முதல்வர் ஸ்டாலின்

தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின்
Updated On :13 செப்டம்பர் 2021, 8:37 am

DIN

தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது. இன்றைய கூட்டத்தில் காவல்துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது, “தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி புதிய காவல் ஆணையாளர் அலுவலகங்கள் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

தற்போது தாம்பரம், ஆவடி ஆகிய இரண்டு பகுதிகளும் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.

முன்னதாக, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட நகராட்சிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.