இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாகன ஏலம் மூலம் ரூ.2.60 கோடி அரசு கணக்கில் சேர்ப்பு: தமிழக காவல்துறை

காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத 1,351 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு ரூபாய் 2.60 கோடி அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
வாகன ஏலம் மூலம் ரூ.2.60 கோடி அரசு கணக்கில் சேர்ப்பு: தமிழக காவல்துறை
Updated On :29 செப்டம்பர் 2021, 7:46 am

DIN

காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத 1,351 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு ரூபாய் 2.60 கோடி அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கியல், 13.09.2021 அன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரையின்போது முதல்வர், காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை ஏலம் விடும் முறையை எளிமையாக்கி, சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் / காவல் கண்காணிப்பாளருக்கு ஏலம் விடும் அதிகாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட உரிமை கோராத வாகனங்கள் மற்றும் மதுவிலக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் பொது ஏலம் விட்டு அரசு கணக்கில் சேர்த்திட மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டது.

இதன்படி, காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் இருந்த
 திருவள்ளூர் மாவட்டத்தில் 172 வாகனங்கள்
 தஞ்சாவூர் மாவட்டத்தில் 135 வாகனங்கள்
 கரூர் மாவட்டத்தில் 207 வாகனங்கள்
 சேலம் மாவட்டத்தில் 103 வாகனங்கள் மற்றும்
 மதுரை மாவட்டத்தில் 203 வாகனங்கள்

ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று திருப்பூர் மாநகர காவல்துறையில் 117 வாகனங்களும், சேலம் மாநகர காவல்துறையில் 10 வாகனங்களும் என இதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் 1,222, நான்கு சக்கர வாகனங்கள் 103 மற்றும் பிற வாகனங்கள் 26 என மொத்தம் 1,351 வாகனங்கள் ரூபாய் 2.60 கோடிக்கு ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களில் தேங்கிக்கிடந்த வாகனங்களை ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ரூபாய் 2.6 கோடி வருமானம் ஈட்டிய பணி தொடர்கிறது. பழுதடைந்த வாகனங்களை ஏலம்விட்ட காவல் ஆணையர்களையும், காவல் கண்காணிப்பாளர்களையும் காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு பாராட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.