சென்னை: சென்னையில் உள்ள அப்பல்லோ புரோடான் புற்றுநோய் மையத்தில் காரை விட்டு கீழே இறங்காமலேயே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் துணைத் தலைவர் பிரீதா ரெட்டி, இந்த புதிய திட்டத்தை தொடக்கிவைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி தெற்காசியாவின் முதல் புரோட்டான் சிகிச்சை மையமாக விளங்கும் அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நடைபெற்றது.
மருத்துவமனைக்குள் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமே என்ற ஒரு தயக்கமே, பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருந்து தாமதப்படுத்தி வருகிறது. இந்தத் தயக்கத்தை சரி செய்யும் வகையில், அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில், தற்காலிகமாக வாகனத்தில் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு திரும்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இதன்படி, மருத்துவமனைக்குச் செல்லும் ஒருவர், தனது காரிலிருந்து கீழே இறங்காமலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தடுப்பூசி செலுத்திக் கொண்டபிறகு, கார்களை நிறுத்த ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு 20 நிமிடம், காரை நிறுத்திவிட்டு, காருக்குள்ளேயே இருக்கலாம். தடுப்பூசி செலுத்தி 20 நிமிடம் வரை எந்த உடல் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, வீட்டுக்கு பாதுகாப்பாகச் செல்லலாம்.
இதையும் படிக்கலாமே.. 10 ஆண்டுகளுக்குப் பின் திமுக அரசின் ஆளுநர் உரை - முழு விவரம்
இதுகுறித்து பீரதா ரெட்டியிடம் பேசுகையில், மருத்துவமனைக்கு வந்து கூட்டத்தில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு பயந்து பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தவிர்த்து வருகிறார்கள். எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடமிருந்து மிகுந்த ஆர்வமும் வரவேற்பும் உள்ளது. ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி செலுத்துவது என்பது மிகவும் முக்கியத்துவம் என்பதை உணர்ந்தே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோர், கோவின் இணையதளம் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்துவிட்டு, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்துக்கு வந்து காரை விட்டு கீழே இறங்காமலேயே தடுப்பூசி செலுத்திக் கொண்டு செல்லலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடவிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட்!

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 பேர்! முதலிடத்தில் 1 வாக்கு!

”மாற்றத்தை விரும்பிய மக்கள்! ஏமாறாமல் இருந்தால் நல்லது!” ரகுபதி பேட்டி
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


