இரு தரங்களில் 'வலிமை' சிமெண்ட்: விலை தெரியுமா?

தமிழக அரசின் 'வலிமை' சிமெண்ட் தரத்தின் அடிப்படையில் இரு வகையில் தயாரிக்கப்படுவதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  
இரு தரங்களில் 'வலிமை' சிமெண்ட்: விலை தெரியுமா?

தமிழக அரசின் 'வலிமை' சிமெண்ட் தரத்தின் அடிப்படையில் இரு வகையில் தயாரிக்கப்படுவதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  

அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான வலிமை சிமெண்ட் கிடைக்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.

தமிழக அரசின் 'வலிமை' சிமெண்ட்டை இன்று (நவ.16) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து விற்பனையைத் தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வலிமை சிமெண்ட் விற்பனை குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பில் இரு தரங்களில் வலிமை சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது. 

தரத்தின் அடிப்படையில் ப்ரீமியம் ரகம் ரூ.350 மற்றும் சூப்பீரியர் ரகம் ரூ.365 என்று வலிமை சிமெண்ட்டுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அரியலூரில் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் வலிமை சிமெண்ட் கிடைப்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளார் என்று கூறினார். 

கடந்த மார்ச் மாதம் தனியார் நிறுவனங்களில் சிமெண்ட் மூட்டை ஒன்று ரூ. 420 முதல் 450-ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ. 470 முதல் 490-க்கு வரை விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com