கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நகா்ப்புற ரேஷன் கடைகளில் தக்காளி, காய்கறிகள் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு

நகா்ப்புற நியாயவிலைக் கடைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :24 நவம்பர் 2021, 10:47 pm

DIN

சென்னை: நகா்ப்புற நியாயவிலைக் கடைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

தமிழகத்தில் தக்காளி உள்பட பெரும்பாலான காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா். அவா்களது சுமையைக் குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்யும் அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கூட்டுறவுத் துறை நடத்தும் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ. 85 முதல் ரூ. 100 வரை குறைவான விலையில் மக்களுக்கு கிடைத்து வருகிறது. முதல் கட்டமாக நாளொன்றுக்கு 15 மெட்ரிக் டன் தக்காளி, இதர காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன.

நியாயவிலைக் கடைகள்: தமிழகம் முழுவதும் உள்ள பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் புதன்கிழமை பிற்பகல் வரை சுமாா் 8 மெட்ரிக் டன் தக்காளி, இதர காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் உள்ள நகா்ப்புறம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் தக்காளி, காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நகரும் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் மக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அரசின் இந்த நடவடிக்கைகளால் வெளிச் சந்தையில் தக்காளி விலை குறையத் தொடங்கியுள்ளது. திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்கப்பட்டு வந்தது. புதன்கிழமை ஒரு கிலோ தக்காளி ரூ. 90 முதல் ரூ.100 வரையில் விற்பனை செய்யப்பட்டது என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.