மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் புதிதாக 740 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 740  பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :27 நவம்பர் 2021, 2:18 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 740  பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர்.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை சனிக்கிழமை (நவ.27) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதிதாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 740 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,24,731-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதிப்பால் 11 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 36454ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 26,79,895ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.