அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

‘விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் எனக் கூறவில்லை’: முதல்வர் விளக்கம்

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என நாங்கள் கூறவில்லை என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை விளக்கமளித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :9 செப்டம்பர் 2021, 8:34 am

DIN

விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என நாங்கள் கூறவில்லை என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை விளக்கமளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,

மத்திய அரசின் அறிவுரை அடிப்படையிலேயே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலங்கள், கூட்டமாக சேர்ந்து கொண்டாட மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என நாங்கள் கூறவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.