இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா? எஸ்பிஐ தேர்வு குறித்து வெங்கடேசன் எம்.பி.

ஸ்டேட் வங்கி துவக்கநிலைத் தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு நெறிமுறைகள் தொடர்ந்து மீறப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

News image
குற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா? எஸ்பிஐ தேர்வு குறித்து வெங்கடேசன் எம்.பி.
Updated On :23 செப்டம்பர் 2021, 10:02 am

DIN

ஸ்டேட் வங்கி துவக்கநிலைத் தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு நெறிமுறைகள் தொடர்ந்து மீறப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும் போதும் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்படுவதுமாக உள்ளது. அரசும், ஸ்டேட் வங்கியும் மீறல்களை தொடர்கின்றன.

மீண்டும் கடிதம் எழுதுகிறேன். ஆனால் இந்தக் கடிதம் வழக்கம் போல ஸ்டேட் வங்கிக்கு அல்ல. குற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா? முழுக்கடிதமும் என்று கூறி கடிதத்தை இணைத்துள்ளார்.
 

அந்த கடிதத்தில், ஸ்டேட் வங்கி நிலைத் தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு நெறிமுறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. 2020ல் இருந்து இந்தப் பிரச்னை குறித்து நிதியமைச்சகம், சமூக நீதி அமைச்சகத்துக்கு கடிதங்கள் அனுப்பி வருகிறேன். அவர்கள் அக்கடிதங்களை ஸ்டேட் வங்கிக்கு அனுப்புவதும் தாங்கள் இட ஒதுக்கீடு நடைமுறையை கடைப்பிடிப்பதாக பதில் தருவதும் வாடிக்கையாக உள்ளது.

ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும் போதும் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்படுவதுமாக உள்ளது. அரசும், ஸ்டேட் வங்கியும் மீறல்களை தொடர்கின்றன.

ஆகவே பிரச்னையின் வேர் அடையாளம் காணப்பட வேண்டும். மீண்டும் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதுகிறேன். ஆனால் இந்தக் கடிதம் வழக்கம் போல ஸ்டேட் வங்கிக்கு அனுப்பப்படுவதற்காக அல்ல. குற்றவாளிகளே தீர்ப்பு எழுதிக் கொள்ளலாமா?

Story image

தற்போதைய முடிவிலும் பொதுப் போட்டி ஓ.பி.சி., எஸ்.சி. பிரிவினருக்கு ஒரே கட் ஆப் 61.75 இருப்பது எப்படி? பொதுப் போட்டியில் தேர்வான இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை இட ஒதுக்கீட்டு கணக்கில் சேர்ப்பது அப்பட்டமான மீறல். பொதுப் பட்டியல் கட் ஆஃப்க்கு அதிகமான மதிப்பெண் பெற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பொதுப் பட்டியலிலேயே கணக்கு வைக்கப்பட வேண்டும்.

இது குறித்து குழு அமைத்து விசாரிக்கட்டும்.  இப்பிரச்னையில் தீர்வு காணப்படும் வரையில் எனது முயற்சிகள் தொடரும். நாடாளுமன்றத்திலும் இதற்கான குரல் கேட்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.