கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

விருத்தாசலம் ஆணவக் கொலை: ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காதல் திருமணம் செய்த கண்ணகி - முருகேசன் தம்பதிகள் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ஆணவக் கொலை: ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை

Published On :

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காதல் திருமணம் செய்த கண்ணகி - முருகேசன் தம்பதிகள் ஆணவக் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக, கண்ணகி - முருகேசன் தம்பதிகள் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என்று இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் 13 பேரில் மருதுபாண்டி என்பவருக்கு தூக்குத் தண்டனையும், மற்ற 12 பேருக்கும் ஆயுள் தண்டனையும் விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மருதுபாண்டி கண்ணகியின் சகோதரர் ஆவார்.

இந்த வழக்கில் பெண்ணின் உறவினர் து.மருதுபாண்டியனுக்கு சாகும் வரை தூக்கு தண்டனை விதித்து கடலூர் எஸ்.சி.,எஸ்டி சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.உத்தமராசா உத்தரவு பிறப்பித்துள்ளார். கண்ணகியின் தந்தைக்கு துரைசாமிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட 15 பேரில் கொல்லப்பட்ட முருகேசன் உறவினர்கள் செ.அய்யாசாமி, பா.குணசேகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.  

விருத்தாசலத்தில் குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த முருகேசன் - கண்ணகி இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் காதல் திருமணம் செய்த நிலையில், கொலை செய்யப்பட்டனர்.

இது குறித்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த சிலையில், அனைத்து சாட்சியங்களிடமும் விசாரணை முடிவடைந்து கடலூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளிகள் யார் யார்?
மூக்கு, காது வழியாக விஷத்தை ஊற்றி 2 பேரையும் கொன்று, உடலை எரித்ததாக தொடரப்பட்ட ஆணவக் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் செல்லமுத்து, துணை ஆய்வாளர் தமிழ்மாறன், கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் உள்பட 13 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.

வழக்கின் பின்னணி என்ன?
விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு மகன் முருகேசன் (25). தலித் சமுதாயத்தைச்சேர்ந்த இவர், பி.இ. (கெமிக்கல்) பட்டதாரியாவார். இவர் அதேப் பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி(22) என்பவரை காதலித்து வந்தார். இதனையடுத்து இருவரும் கடந்த 5-5-2003 அன்று கடலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர். எனினும் அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர், ஸ்ரீமுஷ்ணம் அருகே வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, காதல் விவரம் தெரியவந்தது. எனவே, முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8-ஆம் தேதி முருகேசனையும், மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர். பின்னர் முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர்.

சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் காவல் துறையினரிடம் தெரிவித்தபோது அவர்கள் நடவடிக்கை எடுக்காததோடு, சம்பவத்தை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டனராம். இதனையடுத்து சில நாள்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானது. அதன்பின்னர் விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். அதில் முருகேசன், கண்ணகி ஆகியோர் சாதி மாறி திருமணம் செய்ததால் அவரவர் தரப்பினர் தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி இரு தரப்பிலிருந்தும் தலா 4 பேரை கைது செய்தனர்.

ஆனால் இந்தக் கொலைகள் சாதி ஆணவத்தில் நடத்தப்பட்டது என்றும், எனவே, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு 2004-ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. அதே ஆண்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

அதில், அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்தது.

இந்த வழக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், மற்ற 12 பேருக்கும் ஆயுள் தண்டனையும் அளித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.