ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை மக்கள் ஏற்க வேண்டும் என்ற அமித் ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-ஆவது கூட்டம், தில்லியில் அமித் ஷா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அமித் ஷா கூறியதாக உள்துறை அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் முக்கிய பகுதியாக, ஹிந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உள்ளூா் மொழிகளுக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் கருதக்கூடாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ழ'கரத்தைக் கொண்ட ஈட்டியை ஏந்திய பெண்ணுடன் 'தமிழணங்கு' என்று குறிப்பிட்டு பாரதிதாசனின் 'இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளையும் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மானின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் கொலை: காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு!

ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நின்றவா் நல்லகண்ணு

சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருது அளிப்பு

கேசராபட்டி பள்ளியில் ரோபோட்டிக் - அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

