முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவை நான்கு நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை கூடியது. இன்றைய கேள்வி நேரத்தில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் கருத்து தெரிவித்த பின்னர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
“அணை பாதுகாப்பு சட்டம் என்ற புதிய சட்டத்தை தற்போது கொண்டு வந்துள்ளார்கள். இந்தியாவில் இருக்கும் அனைத்து அணைகளும் அந்த சட்டத்திற்குள் அடங்கவுள்ளன.
பெரிய அணைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக இயக்கம், கண்காணிப்பு மற்றும் அனைத்து பாதுகாப்பு சமந்தமான நடவடிக்கைகளும் மேற்கொள்ள தனி அமைப்பு ஏற்படுத்தப்படுவதாக சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பிற்குதான் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் போன்ற அனைத்து அதிகாரமும் வரவுள்ளன. இந்த அணை பாதுகாப்பு சட்டம் வருவதற்கு இன்னும் ஓராண்டு ஆகும்.
இந்த விவகாரத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசி விரைவில் முடிவெடுக்கப்படும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


