போக்குவரத்துக் கழகங்களின் வேறுபாடுகளை தவிர்க்க குழு: அரசாணை வெளியீடு

போக்குவரத்து கழகங்களின் வேறுபாடுகளை தவிர்க்க குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


போக்குவரத்து கழகங்களின் வேறுபாடுகளை தவிர்க்க குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து தொழிற்சங்கத்தினருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 6 ஆவது கட்ட பேச்சுவார்த்தை புதன்கிழமை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் 7 மணி நேரம் நடைபெற்றது. 

அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்து கழகத்தில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும், அரசுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் அதில் தற்போது வரை இழுபறி நீடித்து வருகிறது. 

போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட விடுமுறைகள், தண்டனைகள் போன்றவற்றில் மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டன. 

இதையடுத்து தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களில் மாறுபட்ட விடுமுறைகள், தண்டனைகள் போன்றவற்றை மாற்றம் செய்து ஒரே மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்தது. 

இந்நிலையில், அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு போக்குவரத்து கழகங்களில் வேறுபாடுகளை தவிர்க்க குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க | வருமான வரித்துறைக்கு அஞ்சாமல் வீட்டில் எவ்வளவு பணம், தங்கம் வைத்திருக்கலாம்?
 
தமிழ்நாடு போக்குவரத்து கழக உயரதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டகற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

மேலும், இந்த குழுவில் சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com