மேட்டூர் - எடப்பாடி சாலையில் போக்குவரத்துக்கு தடை

மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்குகெடுத்து ஓடுவதால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 
சாலையில் தண்ணீர் பெருக்குகெடுத்து ஓடுவதால் மேட்டூர் - எடப்பாடி சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
சாலையில் தண்ணீர் பெருக்குகெடுத்து ஓடுவதால் மேட்டூர் - எடப்பாடி சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்குகெடுத்து ஓடுவதால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 1,85,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது, ஏற்கனவே அணை நிரம்பிய நிலையில் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 120.13 ஆக உள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 1,85,000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடல் போன்று காட்சி அளிக்கும் மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்டுள்ள வெள்ள நீர்.

மேட்டூர் அணையின் சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 1,62,000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் உபரி நீர் கால்வாய் பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

வெள்ள நீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் சங்கிலி முனியப்பன் கோவில் அருகே மேட்டூர் எடப்பாடி சாலையில் வெள்ளநீர் புகுந்தது.  மேட்டூர் - எடப்பாடி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவியர் இருசக்கர வாகனங்களில் காவேரி கிராஸ் பாலம் வழியாக கடந்து சென்றனர். மேட்டூர் அனல் மின் நிலையத்தில் சாம்பல் பாரம் ஏற்ற செல்லும்  லாரி ஓட்டுநர்களும் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

சங்கிலி முனியப்பன் கோவில் பகுதியில் இருந்து கோல் நாயக்கன்பட்டி காவேரி கிராஸ் நவப்பட்டி நாட்டாமங்கலம் பகுதிகளில் காவிரியின் இரு கரைகளிலும் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, பருத்தி, கீரை வகைகள் ஆகியவை நீரில் மூழ்கின. 

பெரு வெள்ளம் ஏற்படும் என்பதால் வருவாய்த்துறை, காவல்துறை, நீர்வளத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் ஒருங்கிணைந்து காவிரி கரைகளில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறை பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் காவேரி கரையை ஒட்டி உள்ளவர்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளார். 

இளைஞர்கள் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் நீரில் இறங்கி குளிப்பதையோ நீச்சல் அடிப்பதையோ மீன் பிடிப்பதையோ கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ புகைப்படங்கள் மற்றும் சுயப்படங்கள் எடுப்பதையோ காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையோ முற்றிலும் தவிர்த்திட வேண்டும் எனவும் மீறுவோர் மீது காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது

கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர்.

காவேரி கரைகளில் முகாமிட்டிருந்த மீனவர்கள் தங்களது முகாம்களை மேடான பகுதிகளுக்கு எடுத்துச் சென்றனர். மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சில மீனவர்கள் முகாம்களை காலி செய்து கொண்டு தங்களது சொந்த கிராமங்களுக்கு சென்றனர். படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சேலம் மாவட்டம் கொளத்தூர் மேட்டூர் பகுதிகளில் இருந்து தருமபுரி மாவட்டம் நெருப்பூர் பெண்ணாகரம் ஏரியூர் செல்லும் பொது மக்களும் தருமபுரி மாவட்டத்தில் இருந்து மேட்டூர் கொளத்தூர் வரும் பொதுமக்களும் வியாபாரிகளும் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com