கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆளுநருடன் அரசியல் பேசினேன்; ஆனால் அதுபற்றி சொல்ல முடியாது: நடிகர் ரஜினிகாந்த்

தமிழக ஆளுநருடன் அரசியல் பற்றி பேசினேன், ஆனால் அதைப் பற்றி இப்போது சொல்ல முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

News image

ஆளுநருடன் அரசியல் பேசினேன்

Updated On :8 ஆகஸ்ட் 2022, 10:44 am

DIN


சென்னை: தமிழக ஆளுநருடன் அரசியல் பற்றி பேசினேன், ஆனால் அதைப் பற்றி இப்போது சொல்ல முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை ஆளுநர் மாளிகைக்கு இன்று காலை சென்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு அவரது இல்லத்தின் வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ஆளுநருடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது, இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழக ஆளுநருடன் 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஆளுநருடன் அரசியல் பற்றி பேசினேன். ஆனால் அதைப் பற்றி இப்போது சொல்ல முடியாது என்றார்.

மீண்டும் அரசியலுக்கு வரப்போகிறீர்களா? என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினி பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய ரஜினி, காஷ்மீரில் பிறந்து, அதிக காலம் வட இந்தியாவில் வளர்ந்தவர் ஆளுநர் ரவி. தற்போது தமிழகத்தில் இருக்கும் ஆன்மிக உணர்வு அவரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

தமிழர்களின் கடின உழைப்பு, நேர்மை போன்றவை மிகவும் பிடித்திருப்பதாக அவர் கூறினார். தமிழகத்தின் நன்மைக்காக நலனுக்காக தான் என்ன செய்யவும் தயார் என்று அவர் என்னிடம் கூறினார் என்று ரஜினி குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் பற்றி விவாதித்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது பற்றி சொல்ல முடியாது என்று ரஜினி பதிலளித்தார்.

ஜெயிலர் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15 அல்லது 25ஆம் தேதி தொடங்கும் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.