வேலூரில் சாலைகளை போடும்போது, சாலையில் உள்ள அடி பம்ப் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை அப்படியே வைத்து சாலை போடுகிறார்களே? என செய்தியாளர்களின் கேள்விக்கு, வேலூரில் சாலை அமைக்கும் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டது அதிமுக ஆட்சியில், ஒப்பந்தம் எடுத்தவர் அதிமுகவைச் சேர்ந்தவர். ஒப்பந்ததாரா் போதிய அனுபவமும் தகுதியும் இல்லாதவர். சட்டப்படி அவருக்கு உரிமை கிடையாது. கடைவீதியில் காய்கறி விற்பனை செய்தவரிடம் பெரிய அளவிலான ஒப்பந்தம் ஒப்படைக்கப்பட்டது. சாலைகளை எப்படி போட வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. எனவே மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.