அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை: வீட்டின் முன்பு முன்னாள் அமைச்சர்கள் முகாம்
நாமக்கல்லில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பி. தங்கமணி, வெ. சரோஜா ஆகியோர் வீட்டின் முன்பாக காத்திருக்கின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கருக்கு ஆதரவாக அவரது வீட்டிற்கு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உள்ளிட்டோர்.









