மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கனியாமூா் பள்ளித் தாளாளா் உள்பட 5 பேரின் சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி பள்ளியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இந்த நிலையில், பள்ளியைக் கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனால் மாணவி இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் பள்ளித் தளாளா் ரவிக்குமாா், செயலா் சாந்தி, பள்ளி முதல்வா் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனா்.
கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் விழுப்புரம் மகளிா் நீதிமன்ற நீதிபதியிடம் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாணவி இறப்பு குறித்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் குழு ஆய்வு முடிவு கிடைக்காத நிலையில், 5 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டாம் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்காக 5 பேரும் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுடைய காவலை நீட்டிக்க சிபிசிஐடி தரப்பில் முறையிடப்பட்டது. அதனால், விசாரணை முடிவில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் சிறைக்காவலை வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீட்டிக்க விழுப்புரம் மகளிா் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி டிரைலர்!

தொடர்ந்து குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


