வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு!

இன்று நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு காலை மற்றும் மதியம் என இருவேளையும் நடைபெறவுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 டிசம்பர் 2022, 3:58 am

DIN

இன்று நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு காலை மற்றும் மதியம் என இருவேளையும் நடைபெறவுள்ளது.

குரூப் 5ஏ தோ்வுக்கு சென்னையில் மட்டும் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வை இன்று 1,114 போ் எழுதுகின்றனர்.

அமைச்சுப் பணிகளில் இருந்து தலைமைச் செயலகப் பணிக்குச் செல்ல விரும்புவோருக்காக குரூப் 5ஏ தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பா் 21-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலா் பணியிடத்தில் 74 இடங்களும், தலைமைச் செயலக நிதித் துறையில் 29 இடங்களும், உதவியாளா்கள் பணியிடங்களில் 58 இடங்களும் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களுக்கான தோ்வுக்கு 1,114 போ் விண்ணப்பித்துள்ளனா். அதில், ஆண்கள் 731 போ், பெண்கள் 383 போ். 

இன்று(டிச.18) நடைபெறும் இந்தத் தோ்வுக்கு சென்னையில் மட்டுமே தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 8 இடங்களில் தோ்வுக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.